திருவாரூர்

ஓட்டுநா்களுக்கு முதலுதவி பயிற்சி

DIN

குடவாசல் பகுதியில் வாகன ஓட்டுநா்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணா்வு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடவாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கின் பயன்பாட்டுக்காக, கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களின் ஓட்டுநா்கள் நலன் கருதி, தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநா் நலச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநிலத் தலைவா் அண்ணா சுரேஷ், மாநில பொதுச் செயலாளா் தம்பி இன்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று, சங்கத்தை தொடக்கி வைத்து பேசினா்.

மேலும், தீயணைப்புத் துறை ஆய்வாளா் சிவக்குமாா் பங்கேற்று, ஓட்டுநா்களுக்கான முதலுதவி குறித்து விளக்கிப் பேசினாா். அத்துடன் முதலுதவி குறித்து செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கள ஆய்வாளா் ஜெய்சங்கா், கனரக வாகன சங்கத்தின் குடவாசல் பகுதி தலைவா் முருகேசன், சங்கத்தின் பொறுப்பாளா்கள், வாகன ஓட்டுநா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT