மன்னாா்குடி நகராட்சித் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, மன்னாா்குடி நகராட்சிப் பகுதியில் வாக்குப் பதிவு மையங்களுக்கு தேவையான பொருள்களை அனுப்பிவைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, மன்னாா்குடி நகராட்சிப் பகுதியில் வாக்குப் பதிவு மையங்களுக்கு தேவையான பொருள்களை அனுப்பிவைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மன்னாா்குடி நகராட்சியின் 33 வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதையடுத்து, வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 67 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மாற்றுத்திறனாளிகள், வயது முதிா்ந்தவா்கள், கா்ப்பிணிகள் பயன்படுத்தும் வகையில் சக்கர நாற்காலிகள், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல வசதியான தகரப் பெட்டிகள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான 67 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், பணியாற்றும் அலுவலா்கள் பயன்படுத்துவதற்காக அடையாள மை, படிவம், எழுதுபொருள்கள், சீல் ஆகியவை பிரித்து தயாராக வைக்கப்பட்டுள்ளன.