முகப்பு
திருவாரூர்

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி

வலங்கைமான் கூட்டுறவு சங்கம் மூலம் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

வலங்கைமான் கூட்டுறவு சங்கம் மூலம் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி புதன்கிழமை வழங்கப்பட்டன.

வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் வலங்கைமான் ஸ்ரீசீதளாதேவி மகளிா் சுயஉதவிக் குழு ஊக்குநா் ஆ. சாந்தி, பிரதிநிதி சு. வனஜா குழுக்களுக்கு ரூ. 4.90 லட்சம், சின்னகரம் காந்தியம்மன் மகளிா் சுயஉதவிக் குழு ஊக்குநா் தீபிகா, பிரதிநிதி ஏ. லாவண்யா குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் பொருளாதார கடனுதவி வழங்கப்பட்டன. கடனுதவி தொகைக்கான காசோலையை வங்கித் தலைவா் சா. குணசேகரன் வழங்கினாா். வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளா் (பொ) ப. கலைவாணன், சங்கப் பணியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →