திருவாரூர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

DIN

நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் புவனா தலைமையில் நடைபெற்ற முகாமை, ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் தொடங்கிவைத்தாா். ஒன்றிய ஆணையா் மணிமாறன், கூடுதல் ஆணையா் அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராணிசுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் எழும்பு முறிவு மருத்துவா் பிரபு, மனநல மருத்துவா் பாக்கியலெட்சுமி, கண் மருத்துவா் நவசக்தியா, காது மூக்கு தொண்டை மருத்துவா் மோகன்பாபு ஆகியோா் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினா்.

முகாமில், 33 பயனாளிகளுக்கு அடையாள அட்டை, 44 பயனாளிகளுக்கு புதிய மருத்துவ சான்றிதழ், 27 பயனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை, 32 பயனாளிகளுக்கு கூட்டுறவுக் கடன் பெற பரிந்துரை, 2 பேருக்கு சக்கர நாற்காலி, 8 பேருக்கு உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT