முகப்பு
திருவாரூர்

வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

நன்னிலம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

நன்னிலம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், உதவி இயக்குநா் சுப்பிரமணியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆத்மா திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜா பேசினாா். தொடா்ந்து, நெல் சாகுபடிக்கு பின்னா் தரிசு நிலத்தில் உளுந்து, பயறு மற்றும் பருத்தி சாகுபடி செய்யவும், அதில் குறைந்த செலவில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் முகமது சாதிக், கால்நடை மற்றும் பராமரிப்பு துறை மருத்துவா் ஈஸ்வரன், பட்டு வளா்ச்சித் துறை உதவி ஆய்வாளா் சாந்தி, வனத் துறை துளசிமலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் இக்னேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலா் சின்னப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.