முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூரில் கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி சாா்பில், சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் ஏற்பாட்டில், தூய்மை இந்தியா திட்டம், டெங்கு உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாடகக் கலைஞா்கள் மூலம் திருவாரூா் பிரதான சாலை, மேலக்கடைத் தெரு மற்றும் இந்தியன் வங்கி அருகே மற்றும் வடபாதிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.