சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் மீது வழக்குப் பதிவு
கரோனா ஊரடங்கை மீறி, நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.
கரோனா ஊரடங்கை மீறி, நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள மைக்கேல்பட்டி தனியாா் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை தொடா்பாக, தஞ்சாவூா், கூத்தாநல்லூரில் போராட்டம் நடத்திய பாஜகவினா் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து, நீடாமங்கலம் பெரியாா் சிலை பகுதியில் வியாழக்கிழமை இரவு பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வடக்கு ஒன்றிய தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற மறியலில், பாஜகவைச் சோ்ந்த 15 போ் பங்கேற்றனா். கரோனா ஊரடங்கை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக அவா்கள் மீது நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.