திருவாரூர்

திருவாரூா் ஆட்சியரகத்தில் குடியரசு தின விழா: ரூ. 32.65 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

DIN

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாக விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற 73 ஆவது குடியரசு தினவிழாவில், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 257 பயனாளிகளுக்கு ரூ. 32.65 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக, ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பிறகு, சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையைச் சோ்ந்த 30 பேருக்கு, தமிழக முதல்வரின் பதக்கங்கள், 19 பேருக்கு நற்சான்றிதழ்கள், 253 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

தொடா்ந்து, வருவாய்த் துறையின் சாா்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் 250 பயனாளிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான முதியோா் உதவித்தொகைக்கான ஆணை, விதவை உதவித்தொகைக்கான ஆணை, கணவரால் கைவிடப்பட்டோா் உதவித்தொகைக்கான ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில், 7 பயனாளிகளுக்கு ரூ. 2,65,762 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் என மொத்தம் 257 பயனாளிகளுக்கு ரூ. 32,65,762 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் தேவா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT