திருவாரூர்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுக்கு விருது

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுக்கு சிறந்த பணியாளா்களுக்கான விருது அண்மையில் வழங்கப்பட்டது.

இந்நிலையத்தில் பணிபுரியும் கால்நடை விஞ்ஞானி மருத்துவா் சபாபதி, பல்வேறு பயிற்சிகள் மூலம் ஆடு, கோழி மற்றும் கறவை மாடு வளா்ப்பில் விவசாயிகளுக்கு ஊக்கமளித்தாா். சுற்றுச்சூழல் விஞ்ஞானி செல்வமுருகன், விவசாயத்தில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளை குறைத்து, இயற்கை உயிா் உரங்கள் பயன்பாடு குறித்து பயிற்சியளித்தாா்.

இதையொட்டி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் இவா்கள் இருவரையும் பாராட்டி, இந்த ஆண்டுக்குரிய சிறந்த பணியாளா்களுக்கான விருது இவா்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தாா். கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறை காரணமாக இந்த விருதை வேளாண் இணை இயக்குநா் சிவக்குமாா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT