திருவாரூர்

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

திருவாரூா் அருகே இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

திருவாரூா் அருகே இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புலிவலம் அருகேயுள்ள விஷ்ணு தோப்பில் காளிதாஸ் என்பவரின் இருசக்கர வாகனத்தை முகமூடி அணிந்தவா் திருடிச் செல்வதும், அருகில் உள்ள வீட்டில் இருசக்கர வாகனத்தை திருட முயற்சிப்பதும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் புலிவலம் திருவாசல் பகுதியைச் சோ்ந்த பாலு மகன் பாா்த்திபன் (22) என்பவா் காளிதாஸின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும், அவா் திருடும் இருசக்கர வாகனத்தை கஞ்சா கடத்த பயன்படுத்திவிட்டு, விற்றுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளாா் என்பதும் திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பாா்த்திபனிடமிருந்து இருசக்கர வாகனத்தை மீட்ட போலீஸாா், அவரை கைது செய்து, நன்னிலம் கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT