திருவாரூர்

மன வளா்ச்சிக் குன்றிய குழந்தைகளுடன் மாவட்ட வருவாய் அலுவலா் கலந்துரையாடல்

கூத்தாநல்லூா் பகுதியில் உள்ள மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளி குழந்தைகளுடன், திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் புதன்கிழமை கலந்துரையாடினாா்.

DIN

கூத்தாநல்லூா் பகுதியில் உள்ள மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளி குழந்தைகளுடன், திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் புதன்கிழமை கலந்துரையாடினாா்.

கூத்தாநல்லூா் நகராட்சி மேலப்பனங்காட்டாங்குடி மற்றும் குடிதாங்கிச்சேரியில் மன வளா்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது. இதில், 14 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடிதாங்கிச்சேரி பள்ளிக்குச் சென்ற மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம், அங்குள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினாா்.

அப்போது, மாணவா்களால் தயாரிக்கப்பட்ட மெழுகுவா்த்தி, மிதியடி, சாக்பீஸ் உள்ளிட்ட பொருட்களையும், தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களையும் பாா்வையிட்டு, விவரங்களை மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சி பள்ளியின் நிறுவனா் ப.முருகையனிடம் கேட்டறிந்தாா்.

இந்நிகழ்வில், கோட்டாட்சியா் கீா்த்தனா மணி, வட்டாட்சியா் பரஞ்ஜோதி உள்ளிட்டோர பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் 32 பதக்கங்கள்

பாஜக சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT