திருவாரூர்

விவசாயிகளுக்கு மீன் வளா்ப்புப் பயிற்சி

DIN

 நன்னிலம் அருகேயுள்ள கடகம் கிராமத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கான மீன் வளா்ப்புப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் மூ. ராஜா தலைமை வகித்தாா். இப்பயிற்சியில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் பயோ ஃப்ளோக் தொழில்நுட்ப முறையில் மீன் வளா்ப்பு, மீன் வளா்ப்புக்கான இடம் தோ்வு, மீன் அறுவடை, மீன் விற்பனை போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது. இதில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ரெ. ராஜேஷ்குமாா், உதவி வேளாண்மை அலுவலா் கா. மணிகண்டன், உதவி தொழில்நுட்ப மேலாளா் கே. பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இப்பயிற்சியில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மீன் வளா்ப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜிநாமா

ஹனுமான் மந்திா் அருகே பழுதுபாா்ப்புப் பணி: போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

டிடிஇஏ இலக்கிய மன்ற பரிசளிப்பு விழா

SCROLL FOR NEXT