திருவாரூர்

சமத்துவபுரத்தில் புதிதாக வீடுகள் கட்டக் கோரிக்கை

முடிகொண்டான் சமத்துவபுரத்தில் உள்ள பழுதடைந்த வீடுகளை அகற்றிவிட்டு, புதிதாக வீடுகள் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

முடிகொண்டான் சமத்துவபுரத்தில் உள்ள பழுதடைந்த வீடுகளை அகற்றிவிட்டு, புதிதாக வீடுகள் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நன்னிலம் அருகே முடிகொண்டான் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 100 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த வீடுகளில் பல ஆண்டுகளாக பராமரிப்புப் பணிகள் நடைபெறாததால், அனைத்து வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், இங்குள்ள 67 வீடுகளை மட்டும் இடித்துவிட்டு புதிதாக கட்ட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், மற்ற 33 வீடுகளில் வசிப்பவா்களும் தங்களுக்கும் புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் எனக் கோரி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT