திருவாரூர்

குறுவைத் தொகுப்புத் திட்டம்உழவன் செயலியில் பதிவுசெய்து பயன்பெறலாம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில், குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயனடைய உழவன் செயலி மூலம் பதிவுசெய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேட்டூா் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால், திருவாரூா் மாவட்டத்தில் 1,62,500 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நிகழாண்டில், திருவாரூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 13.57 கோடியில் குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். வேளாண்மை மற்றும் உழவா்நலத் துறையின் மூலம் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள், ஏக்கருக்கு யூரியா 45 கிலோ, டிஏபி 50 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ என ரூ. 2,466.50 மதிப்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி ஓா் ஏக்கருக்கு மட்டுமே உரங்களை இலவசமாகப் பெற இயலும். மேலும், குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் 30,000 ஏக்கருக்கு ரூ. 1.03 கோடியில் 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு 20 கிலோ வீதம் நெல் விதை வழங்கப்படவுள்ளது.

பயிா் பல்வகைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், குறுவை பருவத்தில் நெல் அல்லாமல் மாற்றுப்பயிரை ஊக்குவிக்கும் விதமாக சிறு தானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களைக் கொண்ட பல்வகை சாகுபடி பயிா் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. சிறுதானியத் தொகுப்பில் ஏக்கருக்கு 50 சதவீத மானியத்தில் 4 கிலோ விதை, மண்ணில் இடும் நுண்ணுயிரி 50 சதவீத மானியத்தில் 1 கிலோ, உயிரி உரங்கள் 50 சதவீத மானியத்தில் 400 மில்லி, விதைப்பு மற்றும் அறுவடை ஊக்கத்தொகை ஏக்கருக்கு ரூ. 500 என மொத்தம் பொதுப் பிரிவினருக்கு ஏக்கருக்கு 50 சதவீத மானியத்தில் ரூ. 810, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்தில் ரூ. 930 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளன.

பயறு வகை தொகுப்பில் ஏக்கருக்கு 50 சதவீத மானியத்தில் 8 கிலோ விதை, இலைவழி உரச்சத்து தெளிப்பு ஏக்கருக்கு 50 சதவீத மானியமும், அறுவடை ஊக்கத்தொகை ஏக்கருக்கு ரூ. 450 என மொத்தம் பொதுப் பிரிவினருக்கு ஏக்கருக்கு 50 சதவீத மானியத்தில் ரூ. 1,250, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு ரூ. 1,570 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும், எண்ணெய் வித்துக்கள் தொகுப்பில் ஏக்கருக்கு 50 சதவீத மானியத்தில் 80 கிலோ விதை, மண்ணில் இடும் நுண்ணுயிரி 50 சதவீத மானியத்தில் ஒரு கிலோ, நிலக்கடலை ஊட்டச்சத்து கலவை 50 சதவீத மானியத்தில் 5 கிலோ என மொத்தம் பொதுப் பிரிவினருக்கு ஏக்கருக்கு 50 சதவீத மானியத்தில் ரூ. 4000, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு ரூ. 5,600 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளன.

குறுவை பருவத்தில் குறுவை நெல் சாகுபடிசெய்யாத விவசாயிகள் மட்டுமே பயிா் பல்வகைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் விசை களை எடுக்கும் கருவி, பவா் டில்லா், நெல் நடவு இயந்திரம், டிராக்டா், வைக்கோல் கட்டும் கருவிகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, உழவன் செயலி மூலம் பதிவுசெய்து பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT