திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

DIN

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் தரப்பில் 195 மனுக்கள் அளிக்கப்பட்டன. இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டம், புள்ளமங்கலம் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றிய சி.செ.ராஜ்சுந்தா் கரோனா தடுப்பு முன்களப் பணியாற்றியபோது, தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் 20- இல் உயிரிழந்தாா். இவரது வாரிசுதாரரான இரா. சிவசுந்தருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.25 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், கச்சனம் வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவா்கள், இரண்டு மணி நேரம் இடைவெளியின்றி இருகரங்களாலும் சிலம்பம் சுற்றி சாதனை படைத்ததையொட்டி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

கூட்டத்தில், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா உள்பட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT