முகப்பு
திருவாரூர்

மன்னார்குடியில் பேராசிரியர் க.அன்பழகனின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு 

மன்னார்குடியில் திமுக பொதுச்செயலராக இருந்த பேராசிரியர் க.அன்பழகனின் 2ஆம் ஆண்டு நினைவு நாள், திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
மன்னார்குடியில் திமுக நகரக்கழக அலுவலகத்தில் பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு .
பகிர்:

மன்னார்குடியில் திமுக பொதுச்செயலராக இருந்த பேராசிரியர் க.அன்பழகனின் 2ஆம் ஆண்டு நினைவு நாள், திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருவாருர் மாவட்டம், மன்னார்குடி காந்தி சாலையில் உள்ள திமுக நகரக் கழக அலுவலகக்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திமுக பொருளாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு எம்பி தலைமை வகித்து, பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி செலுத்தினார்.

இதில், முன்னாள் எம்எல்ஏ பி.ராஜமாணிக்கம், திமுக நகரச் செயலர் வீரா.கணேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சு.ஞானசேகரன், மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் மன்னை த.சோழராஜன், துணைத் தலைவர் ஆர்.கைலாசம், திமுக மாவட்ட துணைச் செயலர் மோ.கலைவாணி, நகர அவைத் தலைவர் த.முருகையன், துணைச் செயலர் வெங்கடேசன், அரசு வழக்குரைஞர் கை.கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.