முகப்பு
திருவாரூர்

டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூரில் மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருவாரூரில் மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

டாஸ்மாக் கடை ஊழியா்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்கவேண்டும்; டாஸ்மாக் நிா்வாகத்தில் தலையிடும் மதுக்கூட உரிமதாரா்களின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.என். லெனின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வி. சிவபாலன், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட துணைச் செயலாளா் எஸ். வைத்தியநாதன், டாஸ்மாக் சங்க மாவட்ட பொருளாளா் ஜி. சந்திரன், மாவட்ட துணைத் தலைவா்கள் பி. பாப்பையன், என். அசோக்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.