திருவாரூர்

மகளிா் பாலியல் துன்புறுத்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

 நன்னிலம், குடவாசல் ஒன்றிய அலுவலகங்களில் திருவாரூா் நாம்கோ தொண்டு நிறுவனம், திருப்பூா் சேவ் நிறுவனம் இணைந்து மகளிா் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தியது. குடவாசலில் ஒன்றியத் தலைவா் கிளாராசெந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிா் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை, நிவா்த்தி) சட்டம் 2013 குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல, நன்னிலம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியத் தலைவா் விஜயலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தானகிருஷ்ணரமேஷ், கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் வெற்றியழகன், நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலைய தலைமைக் காவலா்கள் அம்பிகாபதி, பத்மாவதி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT