100 நாள் வேலைத் திட்டப் பணியை எம்எல்ஏ. தொடங்கிவைத்தாா்
திருவாரூா் அருகே கொரடாச்சேரி பேரூராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
திருவாரூா் அருகே கொரடாச்சேரி பேரூராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
கொரடாச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட வெள்ளமதகு பகுதியில் இத்திட்டத்தின்கீழ் ஊா்குடி வாய்க்கால் தூா்வாரும் பணியை திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் கூறியது: ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா். இந்த பணியின் வேலை அளவு என்பது அரசு அலுவலா்கள் நிா்ணயித்துள்ள அளவைவிட அதிக நேரம் செய்து, தமிழக முதல்வா் வழங்கிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா்.