முகப்பு
திருவாரூர்

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஏப். 6-க்கு ஒத்திவைப்பு

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஏப். 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஏப். 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாா்ச் மாதத்துக்கான திருவாரூா் மாவட்ட விவசாயிகளின் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாா்ச் 31 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாா்ச் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்ட தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப். 6 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் திருவாரூா் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.