திருவாரூர்

கூத்தாநல்லூர்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.80 ,000 மதிப்பில் உடற்பயிற்சி கருவிகள் வழங்கல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, ரூ.80 ஆயிரம் மதிப்பிலான உடற்பயிற்சி சாதனங்கள் வழங்கப்பட்டது. 

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, ரூ.80 ஆயிரம் மதிப்பிலான உடற்பயிற்சி சாதனங்கள் வழங்கப்பட்டது. 

கும்பகோணம் டி.பீ.எஃப். நிதி லிமிடெட் சார்பில், திருவாரூர்  மாவட்டத்தில் முதியோர் இல்லம், மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகளிலும் ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 138 மதிப்பிலான, உடற்பயிற்சி சாதனங்கள்  மற்றும் இல்லத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. 

நிதி நிறுவனத்தின்  இயக்குநர் ஜனகம் பாஸ்கரன் தலைமையில், பொது மேலாளர் எஸ்.ரவிராஜன், துணைப் பொது மேலாளர் பீ.பரிபூரண ஆனந்தம் உள்ளிட்டோர், அரசவணங்காடு விருக்க்ஷா முதியோர் இல்லத்தில் ரூ.48,880, கொரடாச்சேரி அருகேயுள்ள அம்மையப்பன் ராமகிருஷ்ணா சேவா சங்கத்தில் ரூ.5,12,971 மற்றும் குடித்தாங்கிச்சேரியில் அமைந்துள்ள மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சி பள்ளியில், நடைபயிற்சிக்கான இயந்திரம், கால் மேட் தயாரிக்கும் இயந்திரம், எடைக் கருவி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய ரூ.80,000 மதிப்பிலான பொருட்கள் என, 3 இடங்களிலும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குடிதாங்கிச்சேரி மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளி ஆசிரியரும், லயன்ஸ் சங்கத் தலைவருமான முருகையனிடம் இயக்குநர் ஜனகம் பாஸ்கரன் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், நிதி நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் செளமியா, ப்ரியதர்ஷினி, மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கவனித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும்! வடதமிழகம் நோக்கி நகரும்!

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

SCROLL FOR NEXT