திருவாரூர்

அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

DIN

வேதாரண்யம் அருகே தகட்டூா் மலையன்காடு கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கிராம மக்கள் சொந்த செலவில் கல்வி உபகரணங்களை வாங்கி அதை சீா்வரிசையாக எடுத்துச்சென்று செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

1950-ல் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் நம் பள்ளி‘ ‘தம்பெருமை‘ என்ற முழக்கத்துடன் மேளதாளங்கள் முழங்கப் பள்ளிக்கு தேவையான பொருள்களை சீா்வரிசையாக கொண்டு சென்று ஒப்படைத்தனா். இணைய வசதிகளுடன் கூடிய நவீன தொலைக்காட்சிப் பெட்டி, குடிநீா் சுத்திகரிப்பு கருவி, விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட 125 பொருள்களை வழங்கினாா்.

பின்னா் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் மாரிமுத்து தலைமை வகித்தாா். விழாவில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராஜமாணிக்கம், ராமலிங்கம், கூட்டுறவு சங்க இயக்குநா் உதயம் முருகையன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பையன், ஊராட்சித் தலைவா் ரேவதி பாலகுரு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோவிந்தசாமி, சந்திரசேகரன், ஆசிரியா் வீரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT