கூத்தாநல்லூர் பெரியப் பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகை. 
திருவாரூர்

கூத்தாநல்லூர்: பள்ளி வாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகையை செவ்வாய்க்கிழமை நடத்தினர். 

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகையை செவ்வாய்க்கிழமை நடத்தினர். 

கரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, மகிழ்ச்சியுடன் ரமலான் தொழுகையை பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டன. இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ரமலான் பண்டிகை மிக முக்கியமானதாகும். 

பொதக்குடி கால்பந்தாட்ட மைதானத்தில் தொழுகை.

சின்ன சிங்கப்பூர் என அழைக்கப்படும் கூத்தாநல்லூரில், பெரியப் பள்ளி நிர்வாகத்தினர் சார்பில், பெரியப் பள்ளி வளாகம், சின்னப் பள்ளி, மேலப்பள்ளி மற்றும் மஸ்ஜித் கதீஜா பள்ளி, ரஷிதியா பள்ளி, ஹமீதிய்யா பள்ளி, அன்வாரியா பள்ளி, மஸ்ஜி துல் ஹீதா , ரஹீமிய்யா பள்ளி, சிஷ்தி நகர் பள்ளி, என்.ஆர்.அய். பள்ளி, தைக்கால் பள்ளி, மஸ்ஜித் பாத்திமா பீவி, ஆலிம் சாஹிப் தைக்கால் பள்ளி, மஸ்ஜிதுன் நியாஸ், பதுரிய்யா பள்ளி, மஸ்ஜிதுன் நூர், பாத்திமீய்யா மரக்கடை பள்ளி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி சார்பில், ஏ.ஆர். சாலை, மரக்கடை, தண்ணீர் குன்னம், பூதமங்கலம், அத்திக்கடை, பொதக்குடி , ஜமாலியாத் தெரு, அக்கரைப் புதுத்தெரு உள்ளிட்ட இடங்களில் குழந்தைகள் முதல் ஆண்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரும் தொழுகை நடத்தினர். 

இதேபோல், பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாஅத் நிர்வாகசபை அறப்பணிச் சங்கம் சார்பில், பெரியப் பள்ளிவாசல், மேலப்பள்ளி வாசல், புதுமனைப் பள்ளிவாசல், ஃபாத்திமா பள்ளிவாசல் மற்றும் ஜன்னத்துல் ஃ பிர்தவுஸ் பள்ளி வாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களிலிருந்து ஆயிரக்கணக்காணவர்கள் கால்பந்தாட்ட மைதானத்தில் தொழுகை நடத்தினர். 

கூத்தாநல்லுர் மேலப்பள்ளியில் நடத்தப்பட தொழுகை.


தொழுகைக்குப் பின்னர், ஒருவருக்கொருவர் வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, ரமலானுக்கான முட்டைக்கரு கேக், கடற்பாசி பிரியாணி உள்ளிட்டவைகளை, சாதி, மத, பேதமின்றி  அனைவருக்கும் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT