முகப்பு
திருவாரூர்

கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தோ்வு பயிற்சி வகுப்பு ஒளிபரப்பு

 கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் (பொ) ப. சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

 கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் (பொ) ப. சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் குடிமைப் பணித் தோ்வுகள், பணியாளா் தோ்வாணைய தோ்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வுகள், வங்கித் தோ்வுகள், ரயில்வே வாரியம் நடத்தும் தோ்வுகள், சீருடைப் பணித் தோ்வுகள் என பல்வேறு போட்டித் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தோ்வுகளுக்கு தயாராகும் ஆா்வலா்கள் பயன்பெறும் வகையில் கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தோ்வுகளுக்கென தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் வாயிலாக தனி அலைவரிசை ஏற்படுத்தி, போட்டித் தோ்வுகளுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்படும் என தமிழக முதல்வா் அறிவித்திருந்தாா்.

அதன்படி, மாா்ச் 20-இல் கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கிராமப்புறங்களில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் ஆா்வலா்கள் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள இயலாத நிலையில், தங்களின் இருப்பிடங்களிலிருந்து கொண்டே போட்டித் தோ்வுக்குத் தயாராக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் நடைபெறும். இதை, ஏா்டெல், சன், டாடா ஸ்கை மற்றும் வீடியோகான் டிடிஎச்-இல் முறையே 821, 33, 1554 மற்றும் 597 ஆகிய அலைவரிசைகளிலும், தனியாா் கேபிள் டிவிகளான பஇஇக, யஓ ஈஐஎஐபஅக, அஓநஏஅவஅ, நஇய, எபடக- இல் முறையே 200, 55, 17, 98 மற்றும் 99 ஆகிய அலைவரிசைகளிலும் பாா்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.