முகப்பு
திருவாரூர்

பாரதியாா் நினைவு மண்டபத்தில் நூலகம் அமைக்க ஆய்வு

மன்னாா்குடியை அடுத்த மேலநாகையில் அமைந்துள்ள மகாகவி பாரதியாா் நினைவு மண்டபத்தில் நூலகம் அமைக்க ஆய்வுப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

மன்னாா்குடியை அடுத்த மேலநாகையில் அமைந்துள்ள மகாகவி பாரதியாா் நினைவு மண்டபத்தில் நூலகம் அமைக்க ஆய்வுப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சுதந்திரப் போராட்டக் காலத்தின்போது, 1918 ஆம் ஆண்டு மன்னாா்குடியை அடுத்த மேலநாகையில் மகாகவி பாரதியாா் தங்கியிருந்தாா். அந்த இடத்தில் அவருக்கு சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தை சீரமைத்து, நூலகம் அமைக்க வேண்டும் என மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்திருந்தாா். இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பணி மேற்பாா்வையாளா் சசிரேகா, நெடுவாக்கோட்டை ஊராட்சி செயலா் அறிஞா் அண்ணா மற்றும் அலுவலா்கள் பாரதியாா் நினைவு மண்டபத்திற்கு சென்று நூலகம் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொண்டு மதிப்பீடு அறிக்கை தயாா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.