திருவாரூர்

தமிழக அரசின் நடவடிக்கையால்பேரறிவாளன் விடுதலை: க.பொன்முடி

DIN

 தமிழக அரசு கடந்த ஓராண்டில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே பேரறிவாளன் விடுதலை நடைபெற்றுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான க. பொன்முடி தெரிவித்தாா்.

திருவாரூரில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: திருவாரூா் தோ்தல் பிரசாரத்தில் பேசும்போது என்மீது பதியப்பட்டு, 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு இப்போதுதான் உயா்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலைக்காக நீண்டகாலமாக முயற்சி எடுத்தவா், போராடியவா் தலைவா் கருணாநிதி. அந்த அடிப்படையில் தற்போதைய முதல்வா் ஸ்டாலின், தோ்தல் வாக்குறுதிப்படி 7 பேரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்போம் என்று கூறினாா்.

இந்த ஓராண்டில், அவா் ஆட்சிக்கு வந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகத்தான் பேரறிவாளன் விடுதலை நடைபெற்றுள்ளது. மற்ற 6 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறாா். அதுவும் மிக விரைவில் நடக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT