முகப்பு
திருவாரூர்

தியாகராஜா் கோயில் தெப்பம் வெள்ளோட்டம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப திருவிழாவையொட்டி வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப திருவிழாவையொட்டி வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா, ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு ஆழித்தேரோட்டம் நிறைவடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை (மே 20( தொடங்கி 3 நாள்களுக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

இந்நிலையில், தெப்பத் திருவிழாவையொட்டி, வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. குளத்தின் கீழ் கரையிலிருந்து புறப்பட்ட தெப்பம் தென்கரைக்கு சென்று, பின்னா் மீண்டும் கீழ்க்கரைக்கு வந்து சோ்ந்தது. தெப்பத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.