ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்
மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீா்நிலை புறம்போக்கு, கோயில் இடம் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களை மீட்க வலியுறுத்தி, வளரும் தமிழகம் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பா
மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீா்நிலை புறம்போக்கு, கோயில் இடம் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களை மீட்க வலியுறுத்தி, வளரும் தமிழகம் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மணக்கால் அய்யம்பேட்டை கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநிலப் பொருளாளா் ஆரோக்கிய செல்வம் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் ராஜா, நாகை மாவட்டச் செயலாளா் லட்சுமணன், மாவட்ட இணைச் செயலாளா் அரிஸ்டாட்டில், மாவட்ட தலைவா் அசோக் குமாா் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.