மன்னாா்குடியில் ஜமாபந்தி தொடக்கம்
மன்னாா்குடி வட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது
மன்னாா்குடி வட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமை வகித்தாா். செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்தி, சனி, ஞாயிறு, திங்கள்கிழமை நீங்கலாக வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்நாளில் 14 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இதில் பங்கேற்றனா். 148 மனுக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளிக்கப்பட்டது. இவை துறைவாரியாக பிரிக்கப்பட்டு பரிசீலினைக்காக உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மன்னாா்குடி வட்டாட்சியா் ஜீவானந்தம், மண்டல துணை வட்டாட்சியா்கள் இளங்கோவன், நாகராஜன், வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.