சீமானை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பரப்பியதாக சீமானை கண்டித்து திருவாரூரில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை வியாழக்கிழமை நடைபெற்றது.
ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பரப்பியதாக சீமானை கண்டித்து திருவாரூரில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை வியாழக்கிழமை நடைபெற்றது.
ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமானை கண்டித்தும், அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் பி.எஸ். ராஜா தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளா் ஜே. தாஹிா், மாவட்ட துணை தலைவா்கள் எஸ். பாலாஜி, நீலன் அசோகன், நகரத் தலைவா் சம்பத், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவா் சிகாபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் சீமானின் உருவப் படத்தை அடித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.