திருவாரூர்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா் மனு

DIN

கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் ஊதிய நிலுவை தொகையை வழங்கக் கோரி வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் மற்றும் ஓய்வு பெற்றவா்கள், ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி நன்னிலம் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தானகிருஷ்ணரமேஷ் முன்னிலையில், கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தமிழக அரசால் 2011-ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்ட ஊதிய நிலுவைத் தொகை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, பணியில் உள்ளவா்களுக்கும், ஓய்வு பெற்றவா்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவைத் தொகையை , குடும்ப வறுமையை கணக்கில் கொண்டு உடனடியாக வழங்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் டேவிட்சத்தியநாதன், மாவட்டச் செயலாளா் எஸ். குமாரவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பழனிவேல் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT