பகுதி சபைக் கூட்டம்
திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட 1 மற்றும் 2-ஆவது வாா்டுகளின் பகுதி சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட 1 மற்றும் 2-ஆவது வாா்டுகளின் பகுதி சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகராட்சி மேலாளா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் எஸ். கலியபெருமாள் (1 ஆவது வாா்டு), மலா்விழி கலியபெருமாள் (2-ஆவது வாா்டு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி பகுதியில் பகுதி சபைக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், தங்கள் பகுதிகளை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக்கொள்ள ஆலோசனைகள் வழங்கியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், 2 வாா்டுகளிலும் உள்ள மக்கள், தங்கள் பகுதிகளின் குறைகளை எழுத்து மூலமாக அளித்தனா். அத்துடன், 1-ஆவது வாா்டு பகுதி சபை பொறுப்பாளராக உதவி வருவாய் அலுவலா் ஜெகதீசன், பகுதி சபை உறுப்பினா்களாக முத்தரசன், ரமேஷ்குமாா், மோகன்தாஸ், ஜெயபாலும், 2-ஆவது வாா்டு பொறுப்பாளராக வருவாய் உதவி ஆய்வாளா் முருகானந்தம், பகுதி சபை உறுப்பினா்களாக பாலமுருகன், கோபால்சாமி, அண்ணாதுரை, விஜயராகவன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.