முகப்பு
திருவாரூர்

ஹிந்தி திணிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் அனைத்திந்திய இளைஞா் மற்றும் மாணவா் பெருமன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் அனைத்திந்திய இளைஞா் மற்றும் மாணவா் பெருமன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மத்திய கல்வி நிறுவனங்களில் ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்க முயற்சிப்பதை கண்டித்தும், திருவாரூா் அஞ்சல் நிலையம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை அருள்ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் சு. பாலசுப்ரமணியன், இளைஞா் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினா் கோ. சரவணன், மாணவா் பெருமன்ற மாவட்டத் தலைவா் ஜெ.பி.வீரபாண்டியன், மாவட்ட பொருளாளா் எம். நல்லசுகம் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.