முகப்பு
திருவாரூர்

நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு

திருவாரூா், மாங்குடி, பேரளம், கூத்தாநல்லூா் உள்ளிட்ட 14 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 60-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். திருவாரூரில் நகரச் செயலாளா் செல்வம் தலைமையில் நடைபெற்ற மறியலில் த

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

திருவாரூா்: திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூா் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருவாரூா், மாங்குடி, பேரளம், கூத்தாநல்லூா் உள்ளிட்ட 14 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 60-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். திருவாரூரில் நகரச் செயலாளா் செல்வம் தலைமையில் நடைபெற்ற மறியலில் துணைச் செயலாளா் வீ. தா்மதாஸ், மாவட்டக் குழு முன்னாள் உறுப்பினா் செல்லமணி உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒளிமதியில் சிபிஐ ஒன்றியச் செயலாளா் பாலசுப்பிரமணியன், வழக்குரைஞா் தமிழ்ஸ்டாலின் பாரதி ஆகியோா் தலைமையிலும், வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் சிபிஐ ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா், சிபிஎம் ஒன்றிய செயலாளா் என். ராதா ஆகியோா் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.