கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
கடந்த 100 ஆண்டு காலமாக அரசு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி குடியிருக்கும் மக்களை நீதிமன்ற உத்தரவைக் காட்டி, இயந்திரங்களைக் கொண்டு பழைமையான வீடுகளை இடித்துக் தள்ளுகின்றனா்.
அந்த நிலையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவா்களுக்கு மாற்று இடமும், பட்டாவும் வழங்கக் கோரியும் கூத்தாநல்லூா் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்,லெட்சுமாங்குடி பாலத்தருகே நகரச் செயலாளா் பி.முருகேசு தலைமையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விவசாய தொழிலாளா்கள் சங்க நகரச் செயலாளா் எம்.சிவதாஸ், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ராமதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சாலை மறியலால்,திருவாரூா் - மன்னாா்குடி, வடபாதிமங்கலம் - கொரடாச்சேரி பிரதான சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.