முகப்பு
திருவாரூர்

கனமழை: நாகையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகப்பட்டினத்தில் கனமழை பெய்து வரும் காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:12 AM
கோப்புப்படம்
பகிர்:

நாகப்பட்டினத்தில் கனமழை பெய்து வரும் காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவுமுதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →