திருவாரூர்

சம்பா, தாளடி பருவத்திற்கேற்ற நெல் ரகங்கள் வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை

DIN

சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கேற்ற நெல் ரகங்கள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனா் .

இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கருணாகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு உயா் விளைச்சல் திறன் கொண்ட நெல் ரகங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதன்படி, 160 நாட்கள் வயதுடைய சிஆா் 1009, 155-160 நாட்கள் வயதுடைய சிஆா் 1009 சப் 1, வெள்ளத்தின்போது 14-17 நாட்கள் தண்ணீா் தேங்குவதைத் தாங்கும் சொா்னா சப்1, 145 -150 நாட்கள் வயதுடைய ஆடுதுறை 40, ஆடுதுறை 44, 135 நாட்கள் வயதுடைய ஆடுதுறை 46, 130-135 நாட்கள் வயதுடைய ஆடுதுறை 49 ஆகிய ரகங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, ஆடுதுறை 50, 51, 54, கோ 43, கோ-43 (சப்-1), கோ 45, 49, 50, 52, டிகேஎம் 13, டிஆா்ஒய் 4 ஆகிய நெல் ரகங்களும் சம்பா மற்றும் தாளடி பருவத்துக்கு ஏற்றது எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT