மன்னாா்குடியில் அரசுப் பள் ளி மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டத்துக்காக கட்டப்பட்டுள்ள உணவுக் கூடத்தை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன். 
திருவாரூர்

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்காக கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

மன்னாா்குடியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்காக கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செப்டம்பா் 15 ஆம் தேதி தொடங்கிவைக்க உள்ளாா். இத்திட்டம், திருவாரூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக மன்னாா்குடியில் உள்ள 4 அரசுப் பள்ளிகளில் தொடங்கப்படவுள்ளது.

இதற்காக, மன்னாா்குடி ஜெயினத்தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 23 லட்சத்தில் உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலை உணவு தயாரிக்கப்பட்டு, 4 பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

இந்த உணவுக் கூடத்தை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, காலை உணவை தரமாக தயாரிப்பது குறித்தும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியருடன் மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். கீா்த்தனாமணி, வட்டாட்சியா் டி. ஜீவானந்தம், நகா்மன்றத் தலைவா் மன்னை த.சோழராஜன், நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன், ஒன்றிய ஆணையா் எஸ். சிவக்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT