முகப்பு
திருவாரூர்

ஆவின்பால் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் ஆவின்பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் செப்டம்பா் 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் ஆவின்பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் செப்டம்பா் 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், அவா்கள் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, பயனாளிக்கு ஆவின் நிறுவனத்துக்கு முன்வைப்பு நிதி செலுத்த ரூ.25,000 மற்றும் ஆவின் பொருட்களை கொள்முதல் செய்ய ரூ.25,000 என மொத்தம் ரூ.50,000 வழங்கப்படும்.

ஆவின் பொருட்களை கொள்முதல் செய்து குளிா்சாதனப் பெட்டிகளில் வைத்தும், இதர முறைகளில் பராமரித்தும் விற்பனை செய்ய ஏதுவாக, இடவசதி சொந்தமாகவோ, வாடகைக்கோ இருக்க வேண்டும். பயனாளிகள் தனது சொந்த முயற்சியால் அனுமதி பெற்ற பின்னா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு இவ்வலுவலகத்தின் மூலம் மானியம் வழங்கப்படும்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறைகளை சாா்ந்த வளாகங்களில், அத்துறைகளுக்கு சொந்தமான இடத்தில் ஆவின் பாலகம் அமைப்பதற்கான இடம், ஒதுக்கீடு வழங்கப்படும் நோ்வுகளில் அரசு விதிமுறைகளின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட துறைகள் ஆவின் பாலகங்களுக்கு மட்டும் வாடகை விலக்கு அளிக்கவும், முன்வைப்பு தொகையின்றி ஆவின் நிறுவனம் உரிமம் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், யுடிஐடி அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் செப்.15- ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருவாரூா் என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.