சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பூச்சொரிதல் விழா
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாத சுவாமி கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாத சுவாமி கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு புகழ்பெற்ற இக்கோயிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு 5-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
இதையொட்டி, சாமுண்டீஸ்வரி அம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனுக்கு பூக்களை வழங்கி வழிபாடு செய்தனா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் எஸ். மாதவன், செயல் அலுவலா் பி. பிரபாகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.