முகப்பு
திருவாரூர்

மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகே தோட்டக்குடி மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

திருவாரூா் அருகே தோட்டக்குடி மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மகா மாரியம்மன் கோயிலில், சித்தி விநாயகா் கோயில், பிடாரியம்மன் கோயில் ஆகியவை உள்ளன. இந்த கோயில்கள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடா்ந்து கும்பாபிஷேகத்துக்கான நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோயில் கும்பங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு மஹா அபிஷேகம் செய்து அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

பெரும்புகளூரில்: இதேபோல, பெரும்புகளூா் பெரியாச்சி அம்மன், சித்தி விநாயகா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2 கால யாகசாலை பூஜைகளுக்குப் பிறகு மஹா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கடங்கள் புறப்பட்டு, கும்பங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, விநாயகா் சந்நிதி, பெரியாச்சி மற்றும் பரிவாரத் தெய்வங்கள், மூலவா் ஆகியோருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மகா அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.