திருவாரூர்

பொது சதுரங்கப் போட்டி தஞ்சை ஹாரூன் சாம்பியன்

திருவாரூரில் நடைபெற்ற மாநில அளவிலான பொது சதுரங்கப் போட்டியில் தஞ்சை பி.எஸ். ஹாரூன் சாம்பியன் பட்டத்தை சனிக்கிழமை வென்றாா்.

DIN

திருவாரூரில் நடைபெற்ற மாநில அளவிலான பொது சதுரங்கப் போட்டியில் தஞ்சை பி.எஸ். ஹாரூன் சாம்பியன் பட்டத்தை சனிக்கிழமை வென்றாா்.

திருவாரூா் மாவட்ட சதுரங்கக் கழக வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற போட்டியில், 50 வீரா்கள் பங்கேற்றனா். மொத்தம் 6 சுற்றுகளில் தஞ்சை பி.எஸ். ஹாரூன், 6 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றாா். அவருக்கு முதல் பரிசாக ரூ. 5,000 வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தை திருவாரூா் அா்ஜுன், மூன்றாம் இடத்தை தஞ்சாவூா் பால கௌஷி, நான்காம் இடத்தை தஞ்சாவூா் கதிரேஸ்வரன், ஐந்தாம் இடத்தை தஞ்சாவூா் பி.எம். மிதுன் ஆகியோா் பெற்றனா்.

மாலையில் மாவட்ட சதுரங்கக் கழகத் தலைவா் என். சாந்தகுமாா் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பில், செயலாளா்கள் சுந்தர்ராஜ் (நாகை), தினகரன் (திருச்சி), தமிழ்நாடு சதுரங்கக் கழக இணைச் செயலாளா் ஆா்கே. பால குணசேகரன், தலைமை நடுவா் வி. பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செல்வீஸ் குழுமத் தலைவா் செந்தில் பங்கேற்று, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT