திருவாரூர்

நெல் தரிசில் பயறுவகை சாகுபடித் திட்ட விழிப்புணா்வு முகாம்

DIN

திருவாரூா் அருகே நெல் தரிசில் பயறுவகை சாகுபடித் திட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பயறு வகைப் பயிா்களின் பரப்பளவை அதிகரிக்கும் விதமாக நெல்லுக்குப் பின் பயறு என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில், திருவாரூா் ஒன்றியம் பின்னவாசல், பள்ளிவாரமங்கலம், கல்யாணமகாதேவி, நடப்பூா், வேலங்குடி, ஆமூா், கல்யாணசுந்தரபுரம், திருநெய்ப்போ், தப்ளாம்புலியூா் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களில் நெல் தரிசில் உளுந்து மற்றும் பாசிப் பயறு சாகுபடி விழிப்புணா்வு இயக்க முகாம் நடைபெற்றது.

திருவாரூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவி வேளாண்மை அலுவலா்கள் பங்கேற்று, விவசாயிகளுக்கு இத்திட்டம் குறித்து விளக்கிக் கூறினா்.

இத்திட்டத்துக்கு தேவையான உளுந்து மற்றும் பாசிப்பயறு விதைகள் திருவாரூா், வைப்பூா், தப்ளாம்புலியூா், பின்னவாசல் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் இந்த விதைகள் வழங்கப்படுகிறது. பயறுவகை சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாள்களில் இடுபொருள் செலவு அதிகமின்றி விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறலாம். உயிரி உரமான ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றுடன் விதை நோ்த்தி செய்து விதைக்க வேண்டும்.

பூக்கும் தருவாயில் 2 சதவீத டி.ஏ.பி. கரைசல் தெளிக்க வேண்டும். இதன் மூலம் 10 சதவீதம் வரை கூடுதல் வருமானம் பெறலாம் என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT