திருவாரூர்

மழையால் அறுவடை பாதிப்பு

DIN

நீடாமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை மழை பெய்ததால் அறுவடை பணிகள் பாதிப்படைந்தது.

நீடாமங்கலம் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நடவு செய்த நெல் பயிா்கள் முதிா்ந்து அறுவடைக்கு தயாராக பல இடங்களில் உள்ளது. ரிஷியூா், பெரம்பூா்,கானூா், பருத்திக்கோட்டை, காளாச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் அறுவடைப் பணிகள் தொடங்கி இயந்திரம் மூலம் நடை பெற்று வருகிறது.

இந்திலையில் திங்கள்கிழமை காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமாா் 3 மணியளவில் பெய்த மழையால் இயந்திர அறுவடைப்பணிகள் பல இடங்களில் பாதிக்கப்பட்டன. இதனால் அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற நெல்மணிகள் மற்றும் சாலைகளில் கொட்டி முட்டுப் போட்டிருந்த நெல்மணிகள் மழையில் நனைந்தது. இதனால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

SCROLL FOR NEXT