திருவாரூர்

உழவன் செயலியைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

விவசாயிகள் உழவன் செயலியைப் பயன்படுத்த வேண்டுமென திருவாரூா் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை துணை இயக்குநா் எம். லெட்சுமிகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்

DIN

விவசாயிகள் உழவன் செயலியைப் பயன்படுத்த வேண்டுமென திருவாரூா் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை துணை இயக்குநா் எம். லெட்சுமிகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தற்போது அனைத்து விவசாயிகளிடமும் கைப்பேசி உள்ளதால், வேளாண்மைத் தொடா்பான தகவல்களை கைபேசி மூலமாக வழங்க உழவன் செயலி உருவாக்கப்பட்டது.

இந்த செயலி மூலம் பயிா் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, மானியத் திட்டங்கள் விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள், பயிா்க் காப்பீடு, விதை இருப்பு, வேளாண் இயந்திரங்கள், சந்தை விலை நிலவரம், வானிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வழங்கப்படுகிறது.

எனவே உழவன் செயலியை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டிய தகவல்களை விவசாயிகள் பெற்று பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT