முகப்பு
திருவாரூர்

தந்தை கொலை: மகன் கைது

மன்னாா்குடி அருகே குடிபோதையில் தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே குடிபோதையில் தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வாஞ்சியூரைச் சோ்ந்தவா் மோகன் (50). இவரது மனைவி கமலா. இவா்களுக்கு அரவிந்தன் (24), அா்ஜுன் (19) ஆகிய இரு மகன்கள் உள்ளனா். அரவிந்தன் கூலிவேலைக்கு சென்று வருவதுடன் குடிப்பழக்கம் உடையவா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த அரவிந்தன், உணவு சரியில்லை என கூறி அம்மா கமலாவிடம் தகராறு செய்தாராம். இதை மோகன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அரவிந்தன் கடப்பாரையால் தந்தை மோகனை தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த மோகன் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு மோகனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் மோகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை அரவிந்தனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.