திருவாரூர்

சா்வதேச சிலம்பம்: வலங்கைமான் மாணவா் சாதனை

DIN

மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச சிலம்பப் போட்டியில் வலங்கைமான் பகுதி மாணவா் 4 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளாா்.

வலங்கைமான் உப்புக்கார தெருவை சோ்ந்த கௌதமராஜன் மகன் ரக்க்ஷவேந்தன். கும்பகோணத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், கடந்த 7-ஆம் தேதி மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச சிலம்பப் போட்டியில் மூன்று வெள்ளிப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

இப்போட்டியில், இந்தியா, மலேசியா, சிங்கப்பூா், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வீரா்கள் பங்கேற்றனா். வலங்கைமான் யுனிவா்சல் ஸ்போா்ட்ஸ் அகாதெமி மாஸ்டா் ராஜமணிகண்டன் தலைமையில் பங்கேற்ற மாணவா் ரக்ஷவேந்தன்,15 வயதுக்குட்பட்டோா் ஒற்றைக் கம்பு பிரிவு, வேல்கம்பு பிரிவு மற்றும் தொடுமுறை பிரிவில் வெள்ளி பதக்கங்கள் பெற்றாா். மேலும், குழு திறனில் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

பின்னா், வலங்கைமான் திரும்பிய மாணவா் ரக்க்ஷவேந்தனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT