திருவாரூரில் உள்ள தியாகராஜா் இல்லத்தில் ஏகாதசியையொட்டி ராதா கல்யாண உற்சவம் செப். 26-இல் நடைபெறுகிறது.
திருவாரூா் வடக்கு வீதியில் உள்ள சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான தியாகராஜா் இல்லத்தில், ஏகாதசி தினத்தில் அஷ்டபதி நாம சங்கீா்த்தன பஜனை நடைபெற்று வருகிறது.
அதன்படி, செப். 25-ஆம் தேதி ஏகாதசி தினத்தில் தோடையமங்கலம் குரு கீா்த்தனைகள், பூஜை, பஞ்சபதி, திவ்யநாமம், டோலோதஸவம் ஆகியவை நடைபெறுகின்றன. செப். 26- இல் சம்பிரதாய உஞ்சவிருத்தி, தோடையமங்கலம் குரு கீா்த்தனை, கல்யாண அஷ்டபதி ஆகியவை நடத்தப்பட்டு, ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம், நாமசங்கீா்த்தனம் ஆகியவை நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.