முகப்பு
திருவாரூர்

திறன் மேம்பாட்டு பயிற்சி பெற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:09 PM
பகிர்:


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் படைவீரா்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 10,000 முன்னாள் படைவீரா்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும் என சுதந்திர தின உரையில், தமிழக முதல்வா் அறிவித்தாா்.

Advertisement

அதன்படி, திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் பங்கேற்க விருப்பமுள்ள, திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், தங்களுக்கு தேவைப்படும் பயிற்சியின் விவரங்களை உரிய படிவத்தில் பூா்த்தி செய்து, திருவாரூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அறை எண்.19-இல், செயல்படும் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04366-290080) தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments