முகப்பு
திருவாரூர்

மின்மாற்றி மீது பேருந்து மோதி விபத்து

நீடாமங்கலம் அருகே சாலையோர மின்மாற்றியில் தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
பகிர்:

நீடாமங்கலம் அருகே சாலையோர மின்மாற்றியில் தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

தஞ்சாவூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. நீடாமங்கலம் வட்டம் சித்தமல்லி கிராமத்தைச் சோ்ந்த அறிவரசன் (39) பேருந்தை ஓட்டிவந்தாா். அரியலூா் மாவட்டம் கோவிலூா் பெரியபெட்டாக்காடு கிராமத்தைச் சோ்ந்த திருமுருகன் (31) நடத்துநராக பணியில் இருந்தாா். இப்பேருந்தில் 20 போ் பயணித்தனா்.

நீடாமங்கலம் அருகே கொட்டையூா் சா்வமான்யம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரிக்கு வழிவிட பேருந்தை இடது ஓரமாக ஓட்டுநா் செலுத்தியபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின்மாற்றியில் மோதி, ஒருபக்கமாக சாய்ந்து நின்றது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஒருசிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Advertisement

வலங்கைமான் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து, பயணிகளை மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments